குளிர்ந்த நீரில் குளிப்பது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரும். இது "ஐஸ் கட்டி தெரபி" என அழைக்கப்படுகிறது.
கடுமையான உடல் உழைப்பிற்கு பின் ஏற்படும் தசை வலியை குறைக்க இது உதவும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை விரைவாக வழங்கும்.
உடலில் ஏற்படும் வீக்கம், வலி குறைந்து தசைகள் புத்துணர்ச்சி பெறும். கழிவுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
தூங்குவதற்கு முன்பு 5-10 நிமிடங்கள் ஐஸ் கட்டி நீரில் குளிப்பது, ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும்.
நெதர்லாந்து ஆய்வுகளின்படி, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மன அழுத்தம், சோர்வை குறைத்து, மூளையின் செயல்பாட்டை உற்சாகமூட்டும்.