பிரபாஸ் நடித்து வெளியான சாஹோ படத்தை கிண்டலடித்து நெட்ப்ளிக்ஸ் ட்விட்டரில் பதிவிட்டிருந்ததாக நெட்ப்ளிக்ஸுக்கு எதிராக பிரபாஸ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
பிரபாஸ் நடித்து 2019ல் வெளியான பேன் இந்தியா படம் சாஹோ. ஷ்ரதா கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை சுஜீத் இயக்கி இருந்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் இந்தோனேஷிய அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கில் ஒரு வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது. சாஹோ படத்தில் இடம்பெறும் ஒரு ஆக்ஷன் சீனை ஷேர் செய்து கிண்டல் செய்து பதிவிடப்பட்டிருந்துள்ளது. இதை கண்ட பிரபாஸ் ரசிகர்கள் நெட்ப்ளிக்ஸுக்கு கண்டனம் தெரிவித்து, அன்சப்ஸ்க்ரைப் செய்து அந்த ஸ்க்ரீன்ஷாட்டையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து இந்தோனேஷிய நெட்ப்ளிக்ஸ் ட்விட்டர் கணக்கிலிருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நெட்ப்ளிக்ஸுக்கு எதிராக பலரும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.