Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏப்ரல் முழுவதும் வெளிநாடு பறக்கும் இந்தியன் 2 படக்குழு!

ஏப்ரல் முழுவதும் வெளிநாடு பறக்கும் இந்தியன் 2 படக்குழு!
, வியாழன், 9 பிப்ரவரி 2023 (15:03 IST)
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மே மாதத்தோடு நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “RC 15” படத்தையும் இயக்கி வருகிறார். ஷங்கர் தன் திரை வாழ்க்கையில் முதல் முறையாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் மே மாதத்தோடு நிறைவடையும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் முழுவதும் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேஜர் ரவி இயக்கத்தில் நடிக்கும் அதர்வா!