Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று மாலை வருகிறதா இந்தியன் 2 அப்டேட்… எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்!

இன்று மாலை வருகிறதா இந்தியன் 2 அப்டேட்… எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்!
, செவ்வாய், 14 ஜூன் 2022 (16:10 IST)
இந்தியன் 2 திரைப்படம் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை. படம் சம்மந்தமாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதில் சுமூக முடிவு ஏற்பட்டு விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் டான் படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் “விரைவில் இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடங்க உள்ளோம்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து லைகா நிறுவனம் இன்று மாலை முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அது இந்தியன் 2 அப்டேட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு தொப்பை வந்துவிட்டது- பிரபல நடிகையின் வைரல் வீடியோ