Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாடிவாசல் முடித்ததும் வெற்றிமாறனின் மெகா திட்டம்… வெளியான தகவல்

வாடிவாசல் முடித்ததும் வெற்றிமாறனின் மெகா திட்டம்… வெளியான தகவல்
, செவ்வாய், 14 ஜூன் 2022 (15:42 IST)
இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து வாடிவாசல் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார்.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது பாலா இயக்கும் படம் மற்றும் சிறுத்தை சிவா இயக்கும் படம் ஆகியவற்றில் சுர்யா கவனம் செலுத்தி வருகிறார். வெற்றிமாறனும் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தை முடித்ததும் வாடிவாசல் படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாடிவாசல் படத்தை முடித்ததும் வெற்றிமாறன் தனது அடுத்த படத்தில் விஜய்யை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய்யை சந்தித்து இருவரும் இணையும் படம் குறித்து வெற்றிமாறன் பேசி உள்ளதாக தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேஜிஎஃப் ஸ்டைலில் பாராளுமன்றத்தில் படமாக்கப்பட்ட கார்த்தியின் சர்தார்!