Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செம்பி டிரைலரைப் பார்த்து பாராட்டிய கமல்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்!

செம்பி டிரைலரைப் பார்த்து பாராட்டிய கமல்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்!
, செவ்வாய், 14 ஜூன் 2022 (10:36 IST)
நடிகர்கள் கோவை சரளா, தம்பி ராமையா மற்றும் அஸ்வின் ஆகியோர் நடித்துள்ள செம்பி திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார்.

இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, கும்கி போன்ற படங்களின் தனக்கான முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் கடைசி சில படங்கள் தோல்வி அடைந்தன.

இதையடுத்து அவர் இயக்கும் அடுத்த  படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வினைக் கதாநாயகனாக்கியுள்ளார். பிரபுசாலமனின் மற்ற படங்களைப் போல இந்த படமும் காடு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டதுதானாம். முழுக்க முழுக்க ஒரு பேருந்தில் நடக்கும் கதை என்று சொல்லப்படுகிறது. தற்போது முழுப் படத்தையும் முடித்துள்ளனர். படத்துக்கு செம்பி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.. இந்த டிரைலரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டார்.

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து படக்குழுவினர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். அப்போது செம்பி டிரைலரைப் பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சத்யராஜ், ஊர்வசி & RJ பாலாஜி நடிப்பில் ’வீட்ல விசேஷம்’… வெளியான சென்சார் தகவல்