2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் இலியானா. அதன் பிறகு விஜய் நடித்த நண்பன் என்ற படத்தில் நடித்தவர் தெலுங்கில் பிரபலமானார். அங்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களோடு நடித்து மார்க்கெட்டின் உச்சத்துக்கே சென்றார். தமிழில் அதன் பிறகு விஜய்யோடு நண்பன் படத்தில் மட்டும் நடித்தார்.
இந்தி சினிமாவுக்கு சென்ர அவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகினார். கடந்த 2023 ஆம் ஆண்டு கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். திருமணம் ஆகாத இலியானா கர்ப்பமாக இருப்பதை கேள்விப்பட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின்னர் அவர் தன்னுடைய காதலர் மைக்கேல் டோலனை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது அவர் இரண்டாவது ஆண்குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இலியானா தம்பதிகளுக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.