Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜாவின் ஆஸ்தான ’’டிரம்மர்’’ புருஷோத்தமன் மறைவு !

Advertiesment
இளையராஜாவின் ஆஸ்தான  ’’டிரம்மர்’’  புருஷோத்தமன் மறைவு !
, செவ்வாய், 19 மே 2020 (17:14 IST)
இளையராஜவின் ஆஸ்தான இசைக் கலைஞர்களில் ஒருவரான புருஷோத்தமன் வயது முதிர்வு காரணமாக   உடல் நலமில்லாமல் இருந்தார்.

இதற்காக அவர் ஒரு மாத காலமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.

இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இருந்து பல்வேறு பாடல்களுக்கு புருஷோத்தமன் டிரம்ஸ் இசைக்கலைஞராக பணியாற்றியுள்ளார். அத்துடன் இளையராஜாவிடம் இசை கண்டக்டராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த புருஷோத்தமனின் மனைவி கடந்த  இரண்டு மாதங்களுக்கு முன்னர் இறந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இசைக்கலைஞர் புருஷோத்தமனின் மறைவுக்கு இசைக் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கபடதாரி படத்தின் டப்பிங் பணிகளில் தீவிரம் காட்டும் படக்குழு!