Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 4 April 2025
webdunia

கபடதாரி படத்தின் டப்பிங் பணிகளில் தீவிரம் காட்டும் படக்குழு!

Advertiesment
kabadadaari
, செவ்வாய், 19 மே 2020 (17:12 IST)
சிபிராஜ் நடிப்பில் உருவாகிவரும் படம் 'கபடதாரி' .கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்துக்காக லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இப்படத்தை சத்யா சைத்தான் படப்புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.

இப்படத்தில் கதைக்கு பலம் சேர்க்கும் கதாபாத்திரத்தில் நடிகை பூஜா குமார் நடித்துள்ளார். நந்திதா ஸ்வேதா ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் நாசர், மயில்சாமி, ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

webdunia

கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு வேலைகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. அந்தவகையில் படத்தின் post production பணிகளில் தீவிரம் காட்டியுள்ள படக்குழு டப்பிங் வேலைகளை விறு விறுப்பாக முடித்து வருகின்றனர். நாசர், ஜெயபிரகாஷ் போன்ற நடிகர்கள் தங்கள் டப்பிங்கை முடித்துவிட்ட நிலையில் தனஞ்ஜெயன் தனது டப்பிங்கை இன்று முடித்துள்ளார். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியதும் படம் வெளியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடபாவிங்களா... என் திருமண விஷயம் எனக்கு மட்டும் லேட்டா தெரியவருது - வரலக்ஷ்மி ஆவேச பதிவு!