ஒரு காலத்தில் அப்பாவைத் திட்டும் மகனாக நடித்தார்… ஆனா இப்போ?- இட்லி கடை படம் குறித்து இளவரசு பகிர்ந்த தகவல்!

vinoth
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (08:50 IST)
தனுஷ்  இயக்குனராகத் தனது நான்காவது படமாக  ‘இட்லி கடை’ படத்தை இயக்கியுள்ளார்.  படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார். படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், இளவரசு மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங் களில் நடித்துள்ளனர்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படம் அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளன. இந்த படம் உள்ளூரில் அப்பா நடத்திய ‘இட்லி கடை’யை எடுத்து நடத்த ஆசைப்படும் மகனின் போராட்டத்தை சொல்லும் படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தில் நடித்துள்ள இளவரசு படம் பற்றி பேசும்போது “இந்த படம் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கிற பாசப்பிணைப்பு பற்றிய கதை.  அப்பா உயிரோடு இருக்கும்போது அவரை பற்றி புரிந்துகொள்ளவில்லையே, அவரை இன்னும் நன்றாக கவனித்திருக்கலாமே என்ற மகனின் ஏக்கம்தான் இந்த படம். ஒரு காலத்தில் அப்பாக்களைத் திட்டியே படம் எடுத்தவர் இப்போது அப்பாவின் அருமையை சொல்கிறார்” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி பேசிய பிரபல நடிகர்.. நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா?

அழகுப் பதுமை எஸ்தர் அனிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான உடையில் ஹாட் லுக்கில் அசத்தும் தமன்னா…!

இதுவரை பார்த்திராத ஒன்றை உருவாக்குகிறோம்… தனது படம் குறித்து அட்லி அப்டேட்!

நூறாவது படத்தில் மீண்டும் இணைகிறதா நாகார்ஜுனா- தபு ஜோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments