ராஜமௌலி & மகேஷ்பாபு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர்!

vinoth
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (08:33 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, கீரவாணி இசையமைக்கிறார். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. ஒரிசாவில் ஷூட்டிங் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக வாரணாசி செட் அமைத்துக் காட்சிகளை எடுக்கவுள்ளார் ராஜமௌலி. இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மகேஷ் பாபுவின் பிறந்தநாளுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் வேலைகள் முடியாததால் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என ராஜமௌலி அறிவித்தார்.

இந்த படத்தின் 2000 கோடி ரூபாய் என்றும் 10000 கோடி ரூபாய் வசூலை எதிர்நோக்கி இந்த படத்தை எடுத்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. அதனால் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த படத்தை பெரியளவில் ரிலீஸ் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பல மொழி நடிகர்கள் ஏற்கனவே நடித்து வரும் நிலையில் தற்போது இந்தி நடிகர் ரன்பீர் கபூர் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

Bigg Boss Season 9 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

அடுத்த கட்டுரையில்
Show comments