தயாரிப்பாளர்களின் செயலால் கடுப்பான தனுஷ்.. இதனால்தான் இளையராஜா பயோபிக் நிறுத்தப்பட்டதா?

vinoth
வெள்ளி, 28 நவம்பர் 2025 (08:45 IST)
இசைஞானி என்று தமிழக மக்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘இளையராஜா’ என்ற பெயரில் உருவாகவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியா தயாரிக்கிறது.

இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன. இதற்காக இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இளையராஜாவோடு நெருக்கமாகப் பழகியவர்கள், அவரின் நண்பர்கள் மற்றும் அவரின் சொந்த ஊர் மனிதர்கள் ஆகியோரை சந்தித்து தகவல்களைத் திரட்டினார். ஆனால் படம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறவில்லை. இதனால் படம் கிடப்பில் போடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அதற்கானக் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தைத் தயாரிக்க முன்வந்த கனெக்ட் மீடியா நிறுவனம் தனுஷிடம் அவர் மிகப்பெரிய இளையராஜா ரசிகர் என்பதால் இந்த படத்தில் சம்பளம் பெறாமல் நடிக்குமாறுக் கேட்டதாம். அதில் கடுப்பான தனுஷ் அந்த படத்தைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments