50 கோடி ரூபாய் வசூலைக் கூட தொடாத ‘இட்லி கடை’… காந்தாரா புயலால் சேதாரம்!

vinoth
சனி, 11 அக்டோபர் 2025 (10:26 IST)
தனுஷ் இயக்கத்தில் உருவான நான்காவது படமாக ‘இட்லி கடை’ கடந்த ஒன்றாம் தேதி ஆயுதபூஜை அன்று ரிலீஸானது.  தனுஷுடன் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றினார்.

குடும்ப செண்டிமெண்ட், இட்லி கடை எமோஷன், பள்ளிப் பருவ காதல், என சிம்பதி எமோஷனல் டிராமாவாக உருவாகியுள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த துயர சம்பவம் மற்றும் அது சார்ந்த அரசியல் சர்ச்சைகளால் இந்த படத்துக்கு பெரியளவில் ஓப்பனிங் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். மேலும் திரையரங்கில் வெளியாகியுள்ள சீரியல் என்றும் ட்ரோல் செய்யப்பட்டது.

இந்த படத்துக்கு அடுத்த நாள் ரிலீஸான ‘காந்தாரா 1’ இந்திய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இதனால் கலவையான விமர்சனங்கள் வந்த ‘இட்லி கடை’ படத்தின் வசூல் வெகுவாகப் பாதித்தது. இந்நிலையில் படம் வெளியாகி 11 நாட்களில் இந்திய அளவில் சுமார் 45 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்தது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 110 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களின் திட்டங்கள்: தயார் நிலையில் 2 இயக்குனர்கள்.

மீண்டும் விஜய் சேதுபதி - பாண்டியராஜ் கூட்டணி: லைக்கா நிறுவனம் தயாரிக்கிறதா?

கமலுடன் இணையும் படத்திற்கு முன் இன்னொரு ரஜினி படம்.. சுந்தர் சி இயக்குனரா?

பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி க்ளிக்ஸ்…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments