சிம்பு மேல் தீராத கோபத்தில் ஐசரி கணேஷ்… அரசன் படத்துக்கு சிக்கல் வருமா?

vinoth
சனி, 11 அக்டோபர் 2025 (10:20 IST)
சில ஆண்டுகளுக்கு முன்னால் சிம்பு நடிப்பில் இரண்டு படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் ஆனார் ஐசரி கணேஷ். அதற்கான சம்பளத்தையும் கொடுத்தார். ஆனால் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் மட்டும் நடித்துக் கொடுத்தார். மற்றொரு படத்துக்குத் தேதிகள் கொடுக்காமல் இழுத்தடித்தார். இது சம்மந்தமாக ஐசரி கணேஷ் நடிகர் சங்கத்தில் புகார் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு என இறங்கினார்.

மேலும் ’கொரோனா குமார் படத்தில் நடித்து முடிக்காமல் வேறு படத்தில் நடிக்க கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தின் ரெட் கார்டு சிம்பு மீது உள்ளது என்றும் அதை மீறி அவர் எப்படி ’தக்லைஃப்’ படத்தில் நடிக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆனால் நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கை முடித்துக் கொள்ளலாம் என சிம்பு தரப்பு சொன்னதால் வழக்கைத் திரும்ப பெற்றார். ஆனாலும் சிம்பு தரப்பு கொடுத்த வாக்குறுதியை சிம்பு காப்பாற்றவில்லை.

அதனால் சிம்பு மேல் ஐசரி கணேஷ் தீராத கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சிம்பு நடிக்கும் அடுத்த படமான ‘அரசன்’ படத்தின் ரிலீஸின் போது அவர் பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments