ஓடிடி ரிலீஸூக்குப் பின் அதிகம் ட்ரால் ஆகும் தனுஷின் ‘இட்லி கடை’!

vinoth
திங்கள், 3 நவம்பர் 2025 (10:03 IST)
தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான ‘இட்லி கடை’ கடந்த ஒன்றாம் தேதி ஆயுதபூஜை அன்று ரிலீஸானது.  தனுஷுடன் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றினார்.

குடும்ப செண்டிமெண்ட், இட்லி கடை எமோஷன், பள்ளிப் பருவ காதல், என சிம்பதி எமோஷனல் டிராமாவாக உருவாகி இருந்த ‘இட்லி கடை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அந்நேரத்தில் வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் பெரியளவில் வெற்றிபெற்ற நிலையில் ‘இட்லி கடை’ படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இட்லி கடை படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியுள்ள நிலையில் அதன் அமெச்சூரானக் காட்சிகள் மற்றும் பிற்போக்குத்தனமான கதையமைப்பு ஆகியவற்றுக்காக அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. சமீபகாலமாக ஓடிடியில் படம் ரிலீஸாகும் போது கேலிகள் மற்றும் ட்ரால் மீம்ஸ்கள் அதிகமாகப் பரவுவது வாடிக்கையாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனிமே என் எதிரி நீங்கதான்! புதுசா வந்த 4 பேரை டார்கெட் செய்த பாரு! தாக்குப்பிடிப்பார்களா ஹவுஸ்மேட்ஸ்!

ஓடிடி ரிலீஸூக்குப் பின் அதிகம் ட்ரால் ஆகும் தனுஷின் ‘இட்லி கடை’!

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின்!

தமிழ்ப் படங்களில் நானா நடிக்க மாட்டேன் என்று சொன்னேன்?... இலியானா எதிர் கேள்வி!

ரஜினியுடன் மோதும் எஸ் ஜே சூர்யா… கோவாவில் முழுவீச்சில் ஜெயிலர் 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments