Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்: கீர்த்தி சுரேஷ் பேட்டி

Advertiesment
அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்: கீர்த்தி சுரேஷ் பேட்டி
, செவ்வாய், 31 ஜூலை 2018 (12:47 IST)
தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்துவரும் நாயகிகளுள் முன்னிலையில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் கதைக்கு தேவையாக இருந்தாலும் முத்தக்  காட்சிகளில் நடிக்க சம்மதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் விக்ரம் ஜோடியாக சாமி ஸ்கொயர், விஷால் ஜோடியாக சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறது. 
 
சாவித்திரி வாழ்க்கை கதையான மகாநதி படத்தில் நடித்த பிறகு தமிழ், தெலுங்கு பட உலகில் வலுவான இடத்தை பிடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தனது சினிமா அனுபவங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், “திரையுலகில் என்னை விட அழகும், திறமையும் உள்ள நடிகைகள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும்  எனக்கு நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் அமைவதற்கு எனது அதிர்ஷ்டம் தான் காரணம். கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். முத்த  காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. அதுபோன்ற காட்சிகளுடன் எனக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. முத்த காட்சியில் நடிக்க மாட்டேன்  என்றதால் அந்த பட வாய்ப்புகள் கைநழுவி போய்விட்டன.
 
எனக்கு சவுகரியமாக இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். கதைக்கு தேவையாக இருந்தாலும் சம்மதிக்க மாட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. முத்த காட்சிகளில் என்னால் சகஜமாக நடிக்கவும் முடியாது.” இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உளவுத்துறை கண்காணிப்பில் விஜய் சேதுபதி ? அதிர்ச்சி தகவல்