கருணாநிதிக்கு மருத்துவ உதவி செய்ய தயார் : எடப்பாடி பழனிச்சாமி

சனி, 28 ஜூலை 2018 (11:55 IST)
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு மருத்துவ உதவிகள் செய்ய தமிழக அரசு தயாராக இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 
வயது முதிர்வு மற்றும் உடல் நிலைக்கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக நலிவு ஏற்பட்டுள்ளது.  கடந்த 2 நாட்களாக கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். 
 
அந்நிலையில், நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலை மோசமானது. எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “திமுக தலைவர் கருணாநிதி நன்றாக இருக்கிறார். அவர் 5 முறை முதல்வராக இருந்துள்ளார். தற்போதும் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதை செய்ய தமிழக அரசு தயாராக இருக்கிறது” என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கருணாநிதியின் தலைமை நீடிக்க வேண்டும்: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி