Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோலக்ஸ் ரோலில் நான் தான் நடிக்க வேண்டியது: பிரபல நடிகர் தகவல்!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (18:34 IST)
கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படத்தின் ரோலக்ஸ் என்ற ரோலில் சூர்யா நடித்து இருந்த நிலையில் அந்த ரோலில் நான் தான் நடித்திருக்க வேண்டியது என பிரபல நடிகர் ஒருவர் பேட்டி அளித்திருந்தார். 
 
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’விக்ரம்’. இந்த படம் ரூபாய் 400 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தில் நடிகர் ரோலஸ் என்ற கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார் என்றும் கடைசி 5 நிமிடங்கள் அவர் மாஸ் காட்டி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், ரோலக்ஸ் கேரக்டரில் முதலில் நடிக்க என்னை லோகேஷ் அணுகினார் என்றும் ஒரு சில காரணங்களால் என்னால் நடிக்க முடியவில்லை என்றும் அதனால் அதனை அடுத்து சூர்யா அந்த கேரக்டரில் நடித்தார் என்றும் கூறியுள்ளார். அவரது இந்தப் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments