Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”என் சுச்சாவை நானே குடிச்சேன்.. காயம் குணமாயிட்டு” - பிரபல பாலிவுட் நடிகரின் சிறுநீர் வைத்தியம்!

Advertiesment
Paresh Rawal

Prasanth Karthick

, செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (11:41 IST)

அஜய் தேவ்கனின் அப்பா எனது சிறுநீரை நானே குடிக்க வேண்டும் என சொன்னார். அதன்படி செய்ததால் என் காயம் குணமானது என கூறியுள்ளார் நடிகர் பரேஸ் ராவல்.

 

இந்தியில் பிரபல துணை நடிகராக இருப்பவர் பரேஸ் ராவல். இந்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து வரும் அவர் தான் மேற்கொண்ட சிறுநீர் வைத்தியம் குறித்து பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

 

ஒருமுறை பரேஸ் ராவல் காலில் அடிப்பட்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார். அப்போது பிரபல நடிகரான அஜய் தேவ்கனின் தந்தை வீரு தேவ்கன், பரேஸ் ராவலை பார்க்க மருத்துவமனை சென்றுள்ளார். 

 

ராவலை நலம் விசாரித்த வீரு தேவ்கன், அவரது காலில் காயங்கள் குணமாக தினமும் அவரது சிறுநீரை அவரே குடிக்க வேண்டும் என்றும், மடக் மடக் என்று குடித்துவிடாமல் பீர் குடிப்பது போல ரசித்துக் குடிக்க வேண்டும் என்றும் சொன்னாராம். அதைக்கேட்டு அதன்படியே பரேஸ் ராவலும் தொடர்ந்து 15 நாட்களாக தனது சுச்சாவை தானே குடித்து வர, இரண்டரை மாதங்களில் ஆற வேண்டிய காயம், ஒன்றரை மாதங்களில் குணமாகியதாம். இதைக்கண்டு மருத்துவர்களே ஆச்சர்யப்பட்டார்களாம்.

 

இதை சமீபத்தில் பரேஸ் ராவல் ஒரு இண்டெர்வியூவில் சொல்லிய நிலையில் இது சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது. சிறுநீரை அருந்தி குணமடையலாம் என எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை, இவ்வாறு ஒரு நடிகர் பேசுவதால் போலி மருத்துவ முறைகளை ஊக்குவிக்கிறார் என மருத்துவ நிபுணர்கள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“அவர் என் நண்பர் மட்டுமல்ல… அவர் என் ரத்தம்..” சின்மயியின் கணவர் குறித்து நெகிழ்ந்த சமந்தா!