Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நான் நடிக்கவில்லை.. பிரபல நடிகர் எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (17:31 IST)
தனுஷ் இயக்கி வரும் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என பிரபல நடிகர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு தேனி அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தனுஷின் ’இட்லி கடை’ திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என நடிகர் அசோக் செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். "நான் தனுஷ் அவர்களின் தீவிர ரசிகன், அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால், அதே நேரத்தில் இட்லி கடை படத்தில் நான் இல்லை. எதிர்காலத்தில் அவருடன் கண்டிப்பாக ஒரு படத்தில் நடிப்பேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இட்லி கடை படத்தில் அசோக் செல்வன் நடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித்.. நரேன் கார்த்திகேயன் வாழ்த்து..!

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் புகைப்பட ஆல்பம்!

வேட்டையன் ரிலீஸ் நாளில் ஓடிடியில் ரிலீஸாகிறதா விஜய்யின் ‘கோட்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments