மீண்டும் கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித்.. நரேன் கார்த்திகேயன் வாழ்த்து..!

Mahendran
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (17:25 IST)
நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள போவதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தனது வாழ்த்துக்களை நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

அஜித், பைக் பந்தயம் மற்றும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக அவர் எந்த சர்வதேச போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் அஜித் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவதற்கான தகவலின் அடிப்படையில், இந்தியாவின் முன்னணி கார் ரேஸ் போட்டியாளர் நரேன் கார்த்திகேயன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் 2025 கார் பந்தய தொடரில் நடிகர் அஜித் கலந்து கொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த தொடரில் அஜித் பதக்கம் வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதற்கிடையில், அஜித் தற்போது 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார், மேலும் இரு படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments