12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

Bala
வியாழன், 6 நவம்பர் 2025 (12:53 IST)
90கள் காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. செம்பருத்தி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ரோஜா தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். செம்பருத்தி படத்தில் ஒரு புதுமுக ஹீரோயினை தேடிக் கொண்டிருந்த செல்வமணிக்கு திருமண ஆல்பத்தில் கிடைத்தவர்தான் ரோஜா. ஆனால் அந்த காலகட்டத்தில் ரோஜா மிகவும் கருப்பாக இருப்பார்.
 
செம்பருத்தி படத்தில் ஒரு மீனவ குடும்ப பெண்ணாக தன் ஹீரோயினை வடிவமைத்த செல்வமணிக்கு இப்படிப்பட்ட பெண் தான் ஹீரோயினாக வேண்டும் என ரோஜாவை கமிட் செய்தார். அதுவே அவருடைய வாழ்க்கை முழுமைக்கும் ஒரு சரியான தேர்வாக இருந்தது. அதிலிருந்து ரஜினி, சத்யராஜ், பிரபு, கார்த்திக் என 90களில் கொடிகட்டி பறந்த முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார்.
 
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிறமொழிகளிலும் தன்னுடைய ஆளுமையை நிருபித்தார். குறிப்பாக தெலுங்கில் ஒரு டாப் ஹீரோயினாகவே வலம் வந்தார். அப்படியே அங்கேயே செட்டிலானார் ரோஜா. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய ரோஜா அரசியலில் குதித்தார். கடந்த ஆட்சியில் எம்பியாக இருந்து ஆந்திராவையே அலறவிட்டார்.
 
அசால்ட்டாக கபடி விளையாடிக் கொண்டும், டான்ஸ் ஆடிக் கொண்டும் பொது இடங்களில் மக்களை உற்சாகப்படுத்தி வந்தார். இப்போது ஆட்சி மாறியதால் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்க இருக்கிறார் ரோஜா. அதுவும் கங்கை அமரன் கதையின் நாயகனாக நடிக்கும் லெனின் பாண்டியன் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் ரோஜா. பாலச்சந்திரன் என்பவர் அந்த படத்தை இயக்குகிறார்.
 
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் அந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். இதன் மூலம் 12 வருடங்களுக்கு பிறகு ரோஜா சினிமாவில் கம்பேக் கொடுக்கிறார். ரோஜாவை வரவேற்கும் வகையில் பட நிறுவனம் ரோஜாவுக்காக சிறப்பு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்