Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஹீரோவாக ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் வீரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஹீரோவாக ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் வீரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, திங்கள், 8 மே 2023 (07:30 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி ’மீசையை முறுக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு ஹீரோவானார். அதன் பின்னர் அவர் நடித்த நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அவர் நடிப்பில் சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு ஆகிய படங்கள் ரிலீஸாகி தோல்வி அடைந்தன. அதையடுத்து தற்போது அவர் மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ARK சரவண் இயக்கத்தில் உருவாகும் வீரன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 2 ஆம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்… லால் சலாம் படத்தின் முதல் லுக் போஸடர்!