தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஹெச் வினோத்… இயக்குனராக ‘மகளிர் மட்டும்’ பிரம்மா!

vinoth
செவ்வாய், 24 ஜூன் 2025 (14:23 IST)
தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஹெச் வினோத். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. அதன் பின்னர் தீரன், வலிமை, துணிவு என அடுத்தடுத்து மாஸ் நடிகர்களின் படங்களை இயக்கி முன்னணி இயக்குனரானார்.

கமல்ஹாசனோடு ஒரு படம் பண்ண ஒப்பந்தம் ஆன, சில காரணங்களால் அந்த படம் தற்போது கிடப்பில் போடப்பட்டது. இப்போது அவர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி வருகிறார். இதுதான் விஜய்யின் கடைசிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் வினோத் தயாரிப்பாளராக அறிமுகமாகவுள்ளார். குற்றம் கடிதல் மற்றும் மகளிர் மட்டும் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் ஒரு படத்தை வினோத் தயாரிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாலையில் நின்று சாப்பாடு.. பாபா குகையில் தியானம்! - மீண்டும் இமயமலையில் ரஜினி!

நான் விஜய்யின் தீவிர ரசிகை! கரூர் சம்பவம் குறித்து காஜல் அகர்வால் சொன்ன பதில்!

என் மனைவி இல்லாவிட்டால் ‘காந்தாரா’ படமே இல்லை: ரிஷப் ஷெட்டி நெகிழ்ச்சி..!

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் மார்வெலஸ் க்ளிக்ஸ்!

சிவப்பு நிற உடையில் ஒய்யாரப் போஸில் அசத்தும் மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments