Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பு… 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த குபேரா!

vinoth
செவ்வாய், 24 ஜூன் 2025 (14:07 IST)
தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த 'குபேரா' திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை பேன் இந்தியா படமாக ரிலீஸானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்க சுனில் நாரங் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் இருந்தும் இதை ஒரு தெலுங்கு படமாகவே ரசிகர்கள் பார்த்ததால் தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படத்துக்குக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் முதல் வார இறுதியில் இந்தியாவில் இந்த படம் 35 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழை விட தெலுங்கில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படம் வெளியாகி ஐந்து நாளில் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.

5 நாளில் மொத்தமாக 54 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இதில் தமிழில் இருந்து சுமார் 15 கோடி ரூபாயும், தெலுங்கில் இருந்து 40 கோடி ரூபாய்க்கு மேலும் வசூலாகியுள்ளது. இதனால் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தொடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகர்கள் எதிர்பார்த்தது வேறு.. நாங்கள் கொடுத்தது வேறு.. ‘தக்லைஃப்’ படத்திற்காக வருத்தம் தெரிவித்த மணிரத்னம்..

அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைக்கும்னு சொன்ன முதல் ஆள் நான்தான்… இப்போ தனுஷுக்கும்…– DSP வாழ்த்து!

கண்ணப்பா படத்தில் பிரபாஸ் எவ்வளவு நேரம் வருவார்?... வெளியான தகவல்!

மும்பையில் மூன்று மாதங்கள் முகாமிடும் அட்லி& அல்லு அர்ஜுன் படக்குழு!

மீண்டும் இணையும் சிம்பு & வெங்கட் பிரபு கூட்டணி… சிம்பு 50 ஆவது படத்தில் நடக்கும் மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments