Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனநாயக வாலிபர் சங்கத்தின் போதையற்ற தமிழ்நாடு- கையெழுத்து இயக்கத்தில் இணைந்த வினோத்

ஜனநாயக வாலிபர் சங்கத்தின் போதையற்ற தமிழ்நாடு-  கையெழுத்து இயக்கத்தில் இணைந்த வினோத்
, வியாழன், 16 பிப்ரவரி 2023 (14:44 IST)
ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அதே போல தனுஷ் நடிப்பில் ஒரு படத்தையும் இயக்க உள்ளதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களில் எந்த படத்தை முதலில் தொடங்குவார் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னெடுக்கும் போதையற்ற தமிழ்நாடு என்ற ஒரு கோடி கையெழுத்து இயக்கத்துக்கு கையெழுத்து இட்டு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். DYFI இயக்கத்தினர் இதற்கு முன்னர் சில திரையுலக பிரபலங்களிடமும் இந்த கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினோடு நடிகர் சூர்யா… வைரல் ஆகும் புகைப்படம்!