Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினோடு நடிகர் சூர்யா… வைரல் ஆகும் புகைப்படம்!

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினோடு நடிகர் சூர்யா… வைரல் ஆகும் புகைப்படம்!
, வியாழன், 16 பிப்ரவரி 2023 (14:38 IST)
நடிகர் சூர்யா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சினுடன் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப் படவில்லை.இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துகு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 10 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்போது சூர்யா, இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “Love & Respect” என்று பகிர்ந்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா? வாரிசு நடிகையையும் விட்டு வைக்காத காஜூ நடிகர்!