Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் அடுத்த படத்தை நான்தான் இயக்குகிறேன்… அது அரசியல் படமல்ல- பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

விஜய்யின் அடுத்த படத்தை நான்தான் இயக்குகிறேன்… அது அரசியல் படமல்ல- பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

vinoth

, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (08:31 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்க இயக்குனர் ஹெச் வினோத்  ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியானது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது குறித்தோ தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஹெச் வினோத் “விஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்கப் போவதாக வெளிவரும் தகவல்கள் உண்மைதான். அது அரசியல் படமல்ல. அது அரசியல் படம் இல்லை. கமர்ஷியல் படம்தான்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவிக்கும் ரகுதாத்தா… சுதந்திர தின வின்னர் கீர்த்தி சுரேஷா?