Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவிக்கும் ரகுதாத்தா… சுதந்திர தின வின்னர் கீர்த்தி சுரேஷா?

பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவிக்கும் ரகுதாத்தா… சுதந்திர தின வின்னர் கீர்த்தி சுரேஷா?

vinoth

, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (08:20 IST)
கேஜிஎப், காந்தாரா உள்பட சூப்பர் ஹிட் படங்களை எடுத்த ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ரகுதாத்தா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பேமிலி மேன் உள்ளிட்ட தொடர்களுக்கு கதை எழுதிய சுமன் குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம் நேற்று ரிலீஸானது.

தங்கலான் மற்றும் டிமாண்டி காலனி 2 ஆகிய படங்களுக்கு மத்தியில் ரிலீஸான இந்த திரைப்படத்துக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் குறைவான தியேட்டர்களிலேயே ரிலீஸானது. ஆனால் வெளியான பின்னர் படத்துக்கு பாஸிட்டிவ்வான விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

மற்ற இரண்டு படங்களுக்கும் நல்ல ஓப்பனிங் இருந்தும் சில எதிர்மறை விமர்சனங்களும் வரத் தொடங்கின. இந்நிலையில்தான் ரகுதாத்தா திரைப்படம் பாராட்டுகளைப் பெறத் தொடங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகைக்கான முகம் இல்லை என நிராகரித்தார்கள்… ஆரம்பகால போராட்டங்கள் பற்றி பேசிய ராஷ்மிகா!