ஹாலிவுட் படத்தில் நடிக்கின்றார் ஜிவி பிரகாஷ்

ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (19:42 IST)
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், நடிப்பு, இசையமைப்பு என இரண்டு துறைகளிலும் பிசியாக உள்ளார். அவருடைய படம் இரண்டு மாதத்திற்கு ஒன்று வெளிவந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் கூட அவர் நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
 
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளிவதுள்ளது. ‘டிராப் சிட்டி’ என்ற படத்தை இயக்கிய ரிக்கி பர்ச்செல் என்ற இயக்குனர் இயக்கும் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
 
 
ஜிவி பிரகாஷூடன் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராண்டன் ஜாக்சன் அவர்களும் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். கைபா பிலிம்ஸ் டென்கணேசன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல தமிழ் நடிகர் நெப்போலியன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் முடிவுக்கு வந்தது சந்தானம் நடித்த ‘டகால்டி’