முடிவுக்கு வந்தது சந்தானம் நடித்த ‘டகால்டி’

ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (19:13 IST)
நடிகர் சந்தானம் நடித்து வரும் படங்களில் ஒன்றான ’டகால்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும், இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
முதல்முறையாக இரண்டு வேடத்தில் சந்தானம் நடித்துள்ள இந்த படத்தில் காமெடி மற்றும் ஆக்சன் இரண்டும் கலந்து இருப்பதாகவும், முதல் முறையாக ஸ்டண்ட் இயக்குநர் சில்வா இந்த படத்தில் ஜாக்கிசான் பாணியில் சந்தானத்திற்கு காமெடியுடன் கூடிய ஸ்டாண்ட் காட்சிகள் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
சென்னை, புனே, ஆந்திரா, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளதாகவும், இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர் 
 
 
விஜய் ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்திற்கு விஜய் நரேன் இசை அமைத்துள்ளார். தீபக் குமார் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானம், யோகிபாபு ஆகிய இருவரும் ஒரே படத்தில் இருப்பதால் இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது

#DagaaltyShootingWrapped

@vijayanans #18Reels @SPChowdhary3 @SenRittika @iYogiBabu @Vijaynarain @editorsuresh @dopdeepakpadhy @jacki_art @silvastunt @shobimaster @Vmuralee31 @glamoursathya05#Dagaalty

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் காப்பான் படத்தின் எதிர்மறை விமர்சனங்கள் – விக்னேஷ் சிவன் காட்டம் !