இவருக்கு பேருதான் பேச்சிலரா?? – ஜி.வி.பிரகாஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

புதன், 11 செப்டம்பர் 2019 (20:29 IST)
ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியாகவிருக்கும் ”பேச்சிலர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடித்து தற்போது வெளியாகியுள்ள “சிவப்பு, மஞ்சள், பச்சை” நன்றாக போய் கொண்டிருக்கிறது. அடுத்ததாக “ஐங்கரன்” என்ற படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் தனது அடுத்தப்படமான பேச்சிலர் என்கிற படத்தை நடித்து முடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

சதீஷ் செல்வகுமார் இயக்கியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக இருந்தது. அதேசமயம் ரஜினிகாந்தின் தர்பார் போஸ்டர் வெளியிடப்பட்டதால் ஒரு மணி நேரம் தாமதமாக போச்டரை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் வெளியிட்டார். அந்த பதிவில் அவர் ”கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்..கமிட் ஆனா உம்முனு இருக்கனும்...Bachelorனா ஜம்முனு இருக்கலாம்.. #Bachelor First Look வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள்!” என்று கூறியுள்ளார்.

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். வழக்கமாக அடல்ட் படங்களாக நடித்து வந்ததாலேயே ஜி.வி.பிரகாஷ் மீது பலருக்கு அதிருப்தி நிலவி வந்தது. ஜி.வி.பிரகாஷ் படங்களை குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாது என்று பொதுமக்களிடையே நிலவி வந்த கருத்தை சமீபத்தில் வந்த படங்கள் கொஞ்சம் மாற்றியுள்ளன. ஆனால் இந்த பேச்சிலர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஜி.வி.பிரகாஷ் பழைய மாதிரியே நடிக்க கிளம்பிவிட்டாரோ என ரசிகர்களை எண்ண வைத்திருக்கிறது. ஆயினும் இளைஞர்கள் மத்தியில் இந்த ஃபர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்...

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தீபாவளி ரேஸில் விஷாலின் ‘ஆக்சன்’?