Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இத ராம் பார்த்தால் என்ன நினைப்பான்...? குட்டியூண்டு உடையில் குத்தாட்டம் போட்ட குட்டி ஜானு!

இத ராம் பார்த்தால் என்ன நினைப்பான்...? குட்டியூண்டு உடையில் குத்தாட்டம் போட்ட குட்டி ஜானு!
, வெள்ளி, 24 ஜூலை 2020 (12:09 IST)
விஜய் சேதுபதி , த்ரிஷா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான 96 படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. வழக்கமான மசாலா அம்சங்கள் எதுவும் இல்லாமல் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் வெற்றியடைந்ததற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, சிறுவயது ராம் ஜானுவாக நடித்த ஆதித்யா மற்றும் கௌரியின் நடிப்பும் ஆகும்.

இப்படம் ரிலிசாகி 100 நாட்களைக் கடந்தும் இன்னமும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் 96 படக் காதல் காட்சிகளின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அதனையடுத்து சிறுவயது ஜானுவாக நடித்த கௌரி தொடர்ந்து Margamkali என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். கூடவே நிறைய குறும்படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் ஏதுமின்றி வீட்டில் இருந்து வரும் கௌரி ஜி கிஷன் மொட்டை மாடியில் செமி கவர்ச்சி உடையணிந்து கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் " இத நம்ம ராம் பார்த்தால் என்ன நினைப்பான்...?" என எபிக் கமெண்ட் அடித்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்கும் பெண் இயக்குனர்: என்ன ஆச்சு சசிக்கு?