Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜானு - ராமுவை போல் இருங்கள் - அட்வைஸ் கொடுத்த 96 நடிகை!

ஜானு - ராமுவை போல் இருங்கள் - அட்வைஸ் கொடுத்த 96 நடிகை!
, செவ்வாய், 31 மார்ச் 2020 (13:28 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க     அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் தற்ப்போது 96 பட புகழ் குட்டி ஜானு கௌரி ஜி கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் 96 படத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறு வயது ஜானு - ராமு இருவருக்கும் கொரோனா மாஸ்க் அணிவித்து எடிட் செய்துள்ள அந்த விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டு "  கொரோனா பயமுறுத்தும் இந்த நேரத்தில் ராமு மற்றும் ஜானுவை போல இருங்கள் என அட்வைஸ் கொடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பிரதிபலிப்பு: எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் - விஷ்ணு விஷால் ட்வீட்!