Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குட்னைட் படக்குழுவினரின் அடுத்த படைப்பு.. ‘லவ்வர்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

குட்னைட் படக்குழுவினரின் அடுத்த படைப்பு.. ‘லவ்வர்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
, வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:49 IST)
கடந்த மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

நகர்ப்புற திரையரங்குகளில் நல்ல வசூலைக் குவித்த குட்னைட் இந்த ஆண்டின் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் குட்னைட் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரபுராம் வியாஸ் இயக்குகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு லவ்வர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சோகமும் கோபமும் சேர்ந்த முகமாக மணிகண்டன் உட்கார்ந்திருக்கும் போடர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40 வருடங்களுக்கு முன்னர் மாயமான கப்பல் பற்றி திரைக்கதை எழுதும் 2018 பட இயக்குனர்!