Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

40 வருடங்களுக்கு முன்னர் மாயமான கப்பல் பற்றி திரைக்கதை எழுதும் 2018 பட இயக்குனர்!

40 வருடங்களுக்கு முன்னர் மாயமான கப்பல் பற்றி திரைக்கதை எழுதும் 2018 பட இயக்குனர்!
, வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:44 IST)
இந்த ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற  திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்துள்ள 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் படமாக 2018 படம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளன.

ஜூட் ஆண்டனியின் அடுத்த படம் பிரம்மாண்டமாக லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ளது. இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. 1979 ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து ஜெர்மனி நோக்கி சென்ற சரக்கு கப்பல் ஒன்று கடலில் ஏற்பட்ட சுழலில் சிக்கி மாயமானது. அதை மையமாக வைத்துதான் இந்த படத்தின் திரைக்கதையை எழுத்தாளர் ஜோஷி ஜோசப்புடன் இணைந்து எழுதி வருகிறாராம் ஜூட் ஆண்டனி.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஞானவேல் ராஜா மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளாரா இயக்குனர் அமீர்?