Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குட்னைட் மணிகண்டனின் புதிய படத்தை தொடங்கிவைத்த விஜய் சேதுபதி!

குட்னைட் மணிகண்டனின் புதிய படத்தை தொடங்கிவைத்த விஜய் சேதுபதி!
, வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (11:41 IST)
சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

நகர்ப்புற திரையரங்குகளில் நல்ல வசூலைக் குவித்த குட்னைட் இந்த ஆண்டின் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் குட்னைட் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரபுராம் வியாஸ் இயக்குகிறார்.

ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்க, ஷான் ரோல்டன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கை க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் விஜய் சேதுபதி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மையோசிட்டிஸ் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் சமந்தா..?