தமிழ் சினிமாவின் வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சமீபத்தைய சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய கூலி படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் படம் வெளியான முதல் காட்சியில் இருந்தேக் கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. விமர்சனங்கள் வசூலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ஏனென்றால் படம் வெளியாகி 10 நாட்களில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இது இந்த படத்தின் பட்ஜெட்டைப் பொறுத்தவரை சுமாரான வசூல் என்றே சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கூலி படம் தமிழ்நாட்டளவில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் வசூலைக் கூட முறியடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அந்த படம் தமிழ்நாட்டளவில் 180 கோடி ரூபாய் வசூலித்திருக்க, கூலி படமோ 168 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை குட் பேட் அக்லி திரைப்படம் பெற்றுள்ளது.