தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.
தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும் "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். கடைசியாக அவர் இயக்கிய கூலி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. மேலும் லோகேஷுக்கு எதிராக ட்ரோல்கள் உருவாகி பறந்தன.
இந்நிலையில் கூலி ரிலீஸுக்குப் பின்னர் அவர் முதல் முதலாக அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் திரையுலகுக்கு வந்த 9 ஆண்டுகளில் 6 படங்கள்தான் எடுத்துள்ளேன். ஆனால் நான் திரைத்துறைக்கு நான் நிறைய பங்களிப்பை செய்துள்ளேன். நான் 22 கதாநாயக நடிகர்களோடு பணியாற்றியுள்ளேன். அவர்களை நான் என் கதையை சொல்லி ஒத்துக்கொள்ள வைத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.