Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோட் படத்தின் ஸ்பார்க் பாடலில் கேலிகளுக்கு உள்ளாகும் விஜய்யின் லுக்!

Advertiesment
கோட் படத்தின் ஸ்பார்க் பாடலில் கேலிகளுக்கு உள்ளாகும் விஜய்யின் லுக்!

vinoth

, ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (08:29 IST)
விஜய் நடித்துள்ள கோட் (the greatest of all time) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் நேற்று மூன்றாவது பாடலான ஸ்பார்க் வெளியாகி அதே போல கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த பாடலை கங்கை அமரன் எழுத யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலா ஆகியோர் பாடியுள்ளனர்.

பாடல் வழக்கம்போல விமர்சிக்கப்பட்டாலும், பாடலில் விஜய்யின் டி ஏஜிங் லுக் கேலிகளை சந்தித்து வருகிறது. ஒட்டுத்தாடி ஒட்டு மீசையோடு அந்த பாடலில் தோன்றும் விஜய்யின் தோற்றம் சமூகவலைதளங்களில் ட்ரோல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசு கொடுத்து ஆஸ்கர் லைப்ரரியில் ராயன் திரைக்கதையை இடம்பெற வைத்தாரா தனுஷ்?