Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோட் படத்தின் முதல் பாதியை பார்த்த விஜய் சொன்னது என்ன?

கோட் படத்தின் முதல் பாதியை பார்த்த விஜய் சொன்னது என்ன?

vinoth

, வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (11:48 IST)
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அந்த மூன்று வேடங்களுக்கும் மூன்று கெட்டப்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்துவரும் நிலையில் படத்தின் அனைத்து மொழிகளுக்குமான சேட்டிலைட் உரிமையை ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் முதல் பாதியை சமீபத்தில் விஜய் பார்த்துள்ளாராம். பார்த்துவிட்டு இயக்குனர் வெங்கட்பிரபுவைப் பாராட்டியுள்ளாராம். இதே போல சிறப்பாக இரண்டாம் பாதியையும் உருவாக்க சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரசாந்தின் அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட காரணம் என்ன?