Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 12 March 2025
webdunia

கோட் படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் எப்போது?... வெளியான தகவல்!

Advertiesment
கோட் படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் எப்போது?... வெளியான தகவல்!

vinoth

, வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (12:14 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. படம்  இதுவரை 400  கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

இதில் பல நடிகர்களின் கேமியோக்களை ஆங்காங்கே வைத்திருந்தார் வெங்கட்பிரபு. இதில் உச்சபட்சமாக கோட் படத்தில் விஜயகாந்த் ஏ ஐ மூலமாக திரும்பக் கொண்டுவரப்பட்டது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இனிய சர்ப்ரைஸாக அமைந்தது. படம் பார்த்த விஜயகாந்த் ரசிகர்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் ஆதர்ச நாயகனை திரையில் பார்த்து மகிழ்ந்தார்கள்.

இந்நிலையில் கோட் படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் எப்போது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அக்டோபர் இரண்டாவது வாரத்தில் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகும் என சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ்… ரசிகர்கள் ஆதரவு எந்த படத்துக்கு?