Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹெச் வினோத்தைக் கொலை செய்துவிட்டு விஜய்யின் கடைசி படத்தை இயக்க வேண்டும்- பார்த்திபனின் விபரீத ஆசை!

ஹெச்  வினோத்தைக் கொலை செய்துவிட்டு விஜய்யின் கடைசி படத்தை இயக்க வேண்டும்- பார்த்திபனின் விபரீத ஆசை!

vinoth

, வியாழன், 19 செப்டம்பர் 2024 (10:44 IST)
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  உருவான கோட் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. படம் இதுவரை 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் ஒரு போஸ்டரோடு வெளியானது.

அக்டோபர் மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படம் பற்றி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ள இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் “விஜய்யின் கடைசி படத்தை நான் இயக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இயக்குனர் ஹெச் வினோத்தை கொலை செய்துவிட்டு, அதன் பிறகு விஜய்யிடம் சென்று, அவர் என்னிடம்தான் உதவி இயக்குனராகப் பணியாற்றினார், அதனால் நான் இந்த படத்தை இயக்குகிறேன் என சொலல்லாம்னு நினைக்குறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நானே மொதல்ல விமல் ரசிகன்தான்… மேடையில் புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி!