#15yearsofghajini –டிவிட்டரில் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (17:16 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி திரைப்படம் ரிலிஸாகி 15 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

சூர்யாவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது கஜினி. அதற்கு முன்னர் காக்க காக்க எனும் ஒரே ஹிட் மட்டுமே கொடுத்து தனக்கான இடத்துக்காக சினிமாவில் தடுமாறிக் கொண்டிருந்த போது அவரை ஒரே நாளில் மற்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக கொண்டு சென்றது கஜினி திரைப்படம். முதலில் அஜித் நடிப்பதாக இருந்து சில காரணங்களால் அது நடக்காமல் போக, கடைசியாக இந்த வாய்ப்பு சூர்யாவுக்கு வந்தது.

சூர்யாவுக்கு மட்டுமில்லாமல் இந்த படத்தின் இயக்குனர் முருகதாஸூக்கு பாலிவுட் கதவை திறந்ததும் கஜினி திரைப்படம். இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட கஜினி திரைப்படம் முதன் முதலில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை பெற்றது. இந்நிலையில் இப்போது அந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் கடந்துள்ளதை அடுத்து சமூகவலைதளங்களில் #15yearsofghajini என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புது லுக்கில் மாஸ் காட்டும் தனுஷ்.. பாலிவுட் மோகம்.. மனுஷன் செம்மையா இருக்காரே

காந்தாராவா மாறிய சூர்யா.. ‘கருப்பு’ படத்தில் இப்படியொரு சீனா? தேறுமா?

தளபதி கச்சேரி பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? விஜய்க்கு அவ்வளவுதானா மவுசு?

சேலையை வித்தியாசமாக அணிந்து கலக்கல் போஸ் கொடுத்த மாளவிகா!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments