Publish Date: Tue, 29 Sep 2020 (16:53 IST)
Updated Date: Tue, 29 Sep 2020 (17:04 IST)
கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த இரண்டு நபர்களுக்கும் ஒரே பெயர் இருந்ததால் குழப்பம் உருவாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய பெயரிலேயே சின்னசேலம் அடுத்த தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவரும் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட அவரை தவறுதலாக தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவரின் உறவினரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் சடலத்தை மாற்றி அனுப்பியதை உணர்ந்து மீண்டும் அவர்களிடம் இருந்து கைப்பற்றி இறந்தவரின் உறவினர்களிடம் கொடுத்துள்ளனர். கொரோனா காரணமாக உடலை முழுவதுமாக மூடி பேக் செய்வதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.