நடிகர் சோனு சூட் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நிலையில் அவருக்கு சக நடிகர்கள் உற்சாக வரவேற்பைக் கொடுத்துள்ளனர்.
கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் வேலையில்லாத தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாகியுள்ளார் வில்லன் நடிகர் சோனு சூட். கடந்த 6 மாதங்களாக அவர் செய்த சேவையால் சினிமா நடிகர்கள் மத்தியிலேயே கூட அவருக்கு மரியாதை அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் அவர் தெலுங்கு படமான அல்லு ஆதர்ஸ் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத் வந்தார். படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களான பிரகாஷ் ராஜ் மற்றும் அனு இம்மானுவேல் ஆகியோர் பொன்னாடை அணிவித்து அவரை கௌரவிக்கும் வகையில் வரவேற்றார்.