Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜி வி பிரகாஷ் படத்தின் பாடலை வெளியிடும் இரண்டு இயக்குனர்கள்!

ஜி வி பிரகாஷ் படத்தின் பாடலை வெளியிடும் இரண்டு இயக்குனர்கள்!
, வியாழன், 10 டிசம்பர் 2020 (16:32 IST)
ஜி வி பிரகாஷ் நடித்து முடித்துள்ள பேச்சிலர் படத்தின் முதல் சிங்கிள் பாடலை இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் வெங்கட்பிரபு வெளியிட உள்ளனர்.

நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்த ’ஜெயில்’ மற்றும் ’ஆயிரம் ஜென்மங்கள்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஏற்கனவே ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இந்த இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து வந்த அடுத்த திரைப்படமான ’பேச்சிலர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு  கடந்த மாதம் முடிவடைந்தது. இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காதல் கண்மணி எனும் பாடலை இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் இன்று மாலை 7 மணிக்கு வெளியிட உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை சித்ராவின் மரணத்தில் மர்மம் ? போலீஸார் விளக்கம்