Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’போதும் இந்த நீண்ட நெடிய சிறைவாசம் … குற்றமிழைக்காமலே’’ – ஜிவி.பிரகாஷ் , பிரகாஷ்ராஜ் டுவீட்

’’போதும் இந்த நீண்ட நெடிய சிறைவாசம் … குற்றமிழைக்காமலே’’  – ஜிவி.பிரகாஷ் , பிரகாஷ்ராஜ் டுவீட்
, வெள்ளி, 20 நவம்பர் 2020 (16:10 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதை தாமதப்படுத்த வேண்டாம் என திரைப்பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இதுகுறித்த ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வருகின்றன. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதில் எந்த இடையூறும் இல்லை என உச்சநீதிமன்ற கூறிய பிறகும் ஆளுனர் இது தொடர்பான ஒப்புதல் வழங்காமல் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அரசியல் கட்சிகள் அவரை விடுதலை செய்ய ஆளுனர் ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் சினிமா நடிகர்கள் சமுத்திரக்கனி, விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் பல ஆண்டு காலமாக நீதிக்காக காத்திருக்கும் அவரை இனியும் தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அதற்கு ஆளுனரிடம் தமிழக முதல்வர் பேச வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், நடிகரும்  இசையமைப்பாளருமான ஜிவி.பிரகாஷ்குமார், ’’போதும் இந்த நீண்ட நெடிய சிறைவாசம் .. குற்றமிழைக்காமலே 30 ஆண்டுகால மிக கொடுமையான சிறைவாசம்..போதும்...! என தமிழினமே ஒன்றுபட்டு சொல்கிறோம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் அவர்கள் ஆவணம் செய்ய வேண்டும் ! @ArputhamAmmal எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்குமார், தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது. #ReleasePerarivalan எனப் பதிவிட்டுள்ளார்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது தற்செயலா? இல்லை திட்டமிட்ட தாக்குதலா? – கஸ்தூரி டுவீட்