Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜி.வி.பிரகாஷின் அடுத்த ஆங்கில ஆல்பம் பாடல் #CryingOut ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Advertiesment
ஜி.வி.பிரகாஷின் அடுத்த ஆங்கில  ஆல்பம் பாடல்  #CryingOut ரிலீஸ் தேதி அறிவிப்பு !
, வியாழன், 12 நவம்பர் 2020 (21:02 IST)
இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷின் அடுத்த ஆல்பம்  பாடலான #cryingout என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்பாடல் வரும் நவம்பர் 19 ஆம் தேதி வெளியாவுள்ளதாக ஜிவி பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர், நடிகர் என ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் தற்போது சுமார் பத்து படங்களில் நடித்தும், மூன்று படங்களில் இசையமைத்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் முதல் முறையாக ஆங்கில ஆல்பம் ஒன்றை ஜிவி பிரகாஷ் தயாரித்து வெளியிட்டார். இதில், ஹாலிவுட் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் இந்த ஆல்பத்தின் டைட்டில் ’கோல்ட் நைட்ஸ்’என்பது குறிப்பிடத்தக்கது

 
ஜி.வி.பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த பாடகி மற்றும் பாடலாசிரியர் ஜூலியா கர்தா ஆகிய இருவரின் கூட்டு முயற்சியில் #HighandDry என்ற பாடல் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி உலக அளவில் ரிலீசாகி வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ஜிவி.பிரகாஷின் அடுத்த ஆல்பம்  பாடலான #cryingout என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்பாடல் வரும் நவம்பர் 19 ஆம் தேதி வெளியாவுள்ளதாக ஜிவி பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் பிரபலம் ஜஸ்டின் பைபருக்கு  #HighandDry  என்ற பாடல் மிகவும் பிடித்துள்ளதால் அவர் ஜி.வி.பிரகாஷ் குமாரை டுவிட்டரில் பின்தொடர்கிறார்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'’பாம்பு விவகாரம்..’’. சிம்புவை நேரில் சந்தித்து சம்மன் ....வனத்துறை முடிவு