Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கௌதம் மேனனின் ‘டாம்னிக்’ படத்துக்கு எதிராக வழக்கு.. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Advertiesment
கௌதம் மேனனின் ‘டாம்னிக்’ படத்துக்கு எதிராக வழக்கு.. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

vinoth

, வியாழன், 23 ஜனவரி 2025 (07:36 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.

அதற்குக் காரணம் அவரின் கடன் தொல்லைகள்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் இயக்குனராகக் கால்பதித்துள்ளார். மம்மூட்டி நடித்துள்ள ‘டாம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்” என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் வரும் இன்று ரிலீஸாகிறது.

இந்நிலையில் இந்த படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய ராகவேந்திரா என்பவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.  2018 ஆம் ஆண்டு தம் நிறுவனத்துக்குப் படம் இயக்கித் தருவதாக சொல்லி 2.4 கோடி ரூபாய் பணம் பெற்றதாகவும், ஆனால் ஒப்பந்தப்படி வேலைகளை முடிக்காமலும் முன்பணத்தை திருப்பித் தராமலும் இழுத்தடிப்பதாகக் கூறி படத்துக்குத் தடை கோரியிருந்தார். ஆனால் நீதிமன்றம் படத்துக்கு தடைவிதிக்கமுடியாது எனக் கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரிசு படத்தின் மொத்த வசூலே 120 கோடிதான்… வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தில் ராஜு தகவல்!